நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்துவதற்கு ஆதரவாக 150 கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்!

Filed under: இந்தியா |

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், நீட், ஜே.இ.இ தேர்வுகளை தாமதப்படுத்துவது மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசம் செய்வதாகும் என 150க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணத்தினால் நீட், ஜே.இ.இ தேர்வுகளை அடுத்த மாதத்தில் நடத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை குறிப்பிட்டுள்ள கல்வியாளர்கள், அரசியல் லாபத்தை அதிகமாக்கி கொள்ள பலரும் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களும், மாணவர்களும் நம் நாட்டின் எதிர்காலம். இதனால் முன்பே அறிவித்தபடி நீட், ஜே.இ.இ தேர்வுகளை மத்திய அரசு சிறப்பாக நடத்தும் என உறுதி கொண்டுள்ளோம் என கடிதத்தில் தெரிவித்துள்ளனார்.