சென்னை வானிலை மையம் அடுத்து வரும் 3 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஒரிரு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன் நீலகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், கோவை, திருப்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின் படி தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.