அடையார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் 9 அடுக்கு வணிகவளாகம் கட்டப்படப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இச்செய்தியை அடையார் பகுதியிலுள்ள மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சென்னையின் பழமையான பணிமனைகளில் ஒன்றான அடையார் பணிமனையில் வணிக வளாகம் அமைக்கக்கூடாது என்று தெரிவித்தனர். சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் இது குறித்து விளக்கமளித்துள்ளது. சென்னையிலுள்ள அடையாறு பேருந்து பணிமனையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் 9 மாடி வளாகம் அமைக்கப்படப் போவதாக வெளியாகி உள்ள தகவல் உண்மையில்லை. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் பல்வேறு பேருந்து பணிமனைகள் உள்ளன. இவற்றில் அடையாறு பணிமனை பழமையானது. இந்த பழமையான பேருந்து பணிமனையில் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக எந்தவித பணிகளும் திட்டமிடவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.