அண்ணாமலைக்கு டி.ஆர்.பி ராஜா பதிலடி!

Filed under: அரசியல்,தமிழகம் |

அண்ணாமலை டி.ஆர்.பி ராஜாவிற்கு என்று தனித்திறமை ஏதும் இல்லை என்ற கருத்தை வெளியிட்டார். அதற்கு சில்லறை கட்சிகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று டிஆர்பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் கோவையில் நடந்த பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அவர் செய்தியாளர்களிடம், “தஞ்சாவூரை சேர்ந்த டிஆர்பி ராஜாவிற்கு என்று தனித்திறமை ஏதும் இல்லை. அவரது தந்தை பணம் சேர்த்து வைத்தார். இவர் அதைக்கொண்டு அரசியலுக்கு வந்தவர். டிஆர்பி ராஜா, தந்தையின் பணத்தைக்கொண்டு கோவை மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைத்து இருக்கிறார். கோவை மக்களை சில்லரை என்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார். டிஆர்பி ராஜா அல்லது அவர் அப்பா டிஆர் பாலு என யார் வேண்டுமென்றாலும் வரட்டும்” என்று அவர் தெரிவித்திருந்தார். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் செய்தியாளர்களிடம், “களத்தில் எதிரியை கண்டறிந்து பணியாற்றினால் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறலாம். கோவையைப் பொருத்தவரை எதிரணியினர் டெபாஸிட் இழக்கும் அளவிற்கு திமுக வெற்றி பெறும். அற்புதமாண பணியை களப்பணியளர்கள் செய்து வருகின்றனர். தொடர்ந்து, திமுக-வினர் மரங்கள், செடிகளை அழித்து ஆறுகளில் நீரை அள்ளியதால் கோவையில் 2 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. நான் இன்னும் அடுப்பையே பற்றவைக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக என்ன சொன்னதென கூறுங்கள். பதில் சொல்கிறேன். சில்லறை கட்சிகள் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று அண்ணாமலை பற்றி டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார்.