அண்ணாமலையின் பேட்டியால் பரபரப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மோடி கால் நகத்தின் தூசிக்கு கூட உதயநிதி சமமானவர் இல்லை என்று பேட்டியளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்வி ஒன்றுக்கு அண்ணாமலையிடம் பதிலளிக்கையில், “உதயநிதி என்பவர் யார்? அவருடைய தாத்தா பெயரையும் அப்பா பெயரையும் எடுத்துவிட்டு பார்த்தால் அவரால் இரண்டு ஓட்டுகள் கூட வாங்க முடியாது. தாத்தா அப்பா சம்பாதித்த பணத்தில் திரைக்கு வந்த ஒரு தோல்வியடைந்த நடிகர், தாத்தா அப்பா பெயரை பயன்படுத்தி அமைச்சர் ஆனவர் தான் உதயநிதி. உதயநிதியை மோடியுடன் ஒப்பிட கூடாது, மோடி அவர்களின் கால் நக தூசிக்கு கூட உதயநிதி சமமானவர் இல்லை. மேலும் மோடியை பற்றி பேசுவதற்கு உதயநிதிக்கு எந்த தகுதியும் இல்லை. கமல், ரஜினி போல் உதயநிதி சிறந்த நடிகர் இல்லை. தன்னுடன் சந்தானம் நடித்தால், சந்தானத்தை பார்க்க வருபவர்கள் தன்னையும் பார்ப்பார்கள் என்று சந்தானத்துடன் நடிக்க வந்தவர் தான் உதயநிதி” என்று உதயநிதி கடுமையாக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இவரது பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.