காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விடும் இன்று டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி முன்னிலையில் நடிகை குஷ்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இவருடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடன் இருந்தார்.

பின்பு செய்தியாளரிடம் பேசிய குஷ்பு; தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு உழைப்போம். இந்தியாவை சரியான பாதையில் கொண்டு பிரதமர் மோடி எடுத்து செல்கிறார். நான் காங்கிரஸில் இருந்த போதே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தேன்.
பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டுக்குத் தேவை என்று புரிந்துகொண்டு பாஜகவில் என்னை இணைத்துக் கொண்டேன். பாஜக மீது பல கோடி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் பாஜக ஆட்சியை அமைக்க தீவிரமாக உழைப்போம் என தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜெயலலிதா பற்றி தவறான கருத்தை ஆ.ராசா எப்படி சொல்லலாம்...-வழக்கறிஞர் ஜோதி
தூத்துக்குடியில் ரூ.328 கோடி செலவில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
மோடியின் டிவிட்டர் கணக்கு – பாலோயர்ஸ்களில் 60 சதவீதம் பேர் போலி!
மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் - மர...