அண்ணாமலை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணமூட்டையை ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சொத்து பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றம் சாட்டினார். அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்து வருகிறார். கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஹெலிகாப்டரில் பணம் மூட்டைகளை அண்ணாமலை கொண்டு வந்தார் என காங்கிரஸ் கட்சியின் வினய்குமார் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதில் அண்ணாமலை அளித்துள்ளபோது, “கால விரயத்தை குறைப்பதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். தோல்வி பயத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எங்கள் மீது குற்றம் காட்டுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.