பாஜக தலைவர் சென்னை மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்துள்ளனர்.
திமுக பேச்சாளர் சாதிக்கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் உள்ள குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ஜெயராம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி நடிகை குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். இந்நிலையில், இந்த மன்னிப்பை ஏற்காத குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து சைதை சாதிக் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மகளிரணி காவல்நிலையத்தில் புகார் அளிப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த பெண்களை திமுகவினர் அவதூறு பேசுவதாகக் கூறி இன்று பாஜக மகளிர் அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் கலந்து கொண்டனர். அனுமதியின்றி இப்போராட்டம் நடத்தியகாகக் கூறி போலிசார் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்துள்ளனர்.