இன்று காலை காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதால்தான் இந்த திட்டத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தேன் என கூறியுள்ளார்.
காவேரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டப்படும் என்பதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். இது குறித்து அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என்னை பெங்களூரில் சந்தித்து நிலக்கரி எடுக்கும் திட்டத்தை திட்டத்துக்கான பட்டியலிலிலிருந்து மூன்று பகுதிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரது கோரிக்கைக்கு முக்கியத்துவமளிக்கும் வகையிலும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டும் ஏலப்பட்டியலில் இருந்து அதனை நீக்குமாறு நான் பரிந்துரை செய்தேன் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன.