அதர்வா நடிக்கும் புதிய படம்!

Filed under: சினிமா |

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் “ஒருநாள் கூத்து” திரைப்படம் மூலமாக கவனத்தை ஈர்த்தவர். இத்திரைப்படத்தில் “அட்டகத்தி” தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியைப் பெற்றது.

அதையடுத்து அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “ஃபர்ஹானா” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஆனால் வசூல் ரீதியாக ஜொலிக்கவில்லை. நெல்சன் இயக்கும் மூன்றாவது படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.