எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் அக்கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. அவரை எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து வரவேற்றுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலின் போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டவர் திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த எஸ்பி சற்குண பாண்டியனின் மகள் சிம்லா முத்து சோழன். இத்தேர்தலில் ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் 57,673 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.