மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் வீரத்தை போற்றுவோம் – இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மரியாதை!

Filed under: தமிழகம் |

இன்று மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நினைவு நாளில் பல தலைவர்கள் பிரமுகர்கள் மரியாதை செலுத்துகிறார்கள். அந்த வரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தியுள்ளனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் 1760 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி பிறந்தவர். இவர் தமிழ் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் இனத்தில் பிறந்தவர். இவர் ஒரு மாபெரும் வீரன் வீரர் ஆவார். பின்பு 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.

இந்த நினைவு நாளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தியுள்ளனர்.

இதை பற்றி முதல்வரின் பதிவில்; ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து “என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு வரி செலுத்த முடியாது”என்ற நிலைப்பாட்டில் உறுதியாய், தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு,வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை அவர்தம் நினைவு நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதை குறித்து துணை முதல்வரின் பதவில்; ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக வீரமுழக்கமிட்டு, உயிரை துச்சமெனத் தியாகம் செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.