அதிமுக ஆதரவாளர்கள் திமுக கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ளது.
இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நகர்மறக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் நிறைவடைந்த பின்பு, கள்ளக் குறிச்சி, 17 வார்டு திமுக கவுன்சிலரான ஞானவேல் என்பவரை, அதிமுக கன்சிலர், அதிமுக நகரச் செயலாளர் பாபு மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். இத்தாக்குதலில் திமுக கவுன்சிலர் ஞானவேலின் சட்டை கிழிந்து உடலில் ரத்தம் வழிந்தது. இதுகுறித்து திமுகவின் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், சில நாட்களுக்கு முன், திமுக கவுன்சிலர் ஞானவேல், அதிமுக கவுன்சிலர் பாபுவின் தம்பி ராஜாவின் மனைவியை (5வது வார்டு திமுக கவுன்சிலர்) திட்டி மிரட்டியுள்ளார். இதற்காக ஞானவேல் இன்று பாபுவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.