சென்னை உயர்நீதிமன்றம் தேனி தொகுதி அதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது. அத்தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி தொகுதியில் 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் ஒருவர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எம்பிர ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.