அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் KYN செயலி!

Filed under: அரசியல்,தமிழகம் |

புதிய சமூக வலைதளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HYPER-LOCAL முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் Dr.பழனிவேல் தியாகராஜன் KYN செயலியைத் தொடங்கி வைத்தார். KYN என்பதன் விரிவாக்கம் Know Your Neighbourhood. இது நமது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் HYPERLOCAL முறையில் இது ஒன்றிணைக்கும். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் Dr. PTR பழனிவேல் தியாகராஜன், “தொழில்நுட்பம் பல்வேறு நாடுகள், சமூகங்கள் மட்டுமில்லாது தனி நபர்களுக்கும் முன்னேற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக கல்வித்துறையில் தொழில்நுட்பம் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது. ஒருகாலத்தில் படிப்பதற்கே பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலை மாறி, தற்போது பட்டயக் கல்வியைக் கூட இலவசமாக இணையத்தில் படிக்க முடிகிற நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியான ஒரு சூழலில் KYN App அறிமுகவிழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு சமூக வலைதளம் உள்ளூர் தொழில்முனைவோர், உள்ளூர் திறமையாளர்கள், சமூக குழுக்கள் என ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள வழி அமைத்துக்கொடுக்கும் என்பதை எண்ணும்போதே பெருமையாக இருக்கிறது. இதன் மூலம், ஆரோக்கியமான இணைய சமூகம், இணைய பயன்பாடு நிச்சயம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.KYN நமது சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்கும். இந்த செயலிக்கும், இதை உருவாக்கியுள்ள குழுவுக்கும் எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டார்.