தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் டிஸ்க்ரினரி பண்டு தொகை ரூ.2 கோடி குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே கடும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. ஆளுநர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கூறிய போது டிஸ்க்ரினரி என்ற இனத்தில் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி ரூபாய் 5 கோடியில் இருந்து ரூபாய் 3 கோடியாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். பல்வேறு இனங்களில் அரசு ஒதுக்கிய நிதியை ஆளுநர் மாளிகை செலவிட்ட விதம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு; உதயநிதி பேச்சு!
களப்பணியாளர்கள் குடும்பங்களில் கல்வி பயில்வோருக்கு ரூ.2.5 கோடி ஊக்கத் தொகை - நடிகர் சூர்யா!
செல்போனால் விபரீதம்; தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்!
வேட்புமனுவை மறந்து விட்டு வந்த தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன். அப்சட்டான அமைச்சர் மூர்த்தி...



