அமலாக்கத்துறை குறித்து பிரதமர் பேட்டி!

Filed under: அரசியல்,இந்தியா |

பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை ‘யூஸ்லெஸ்’லாக இருந்தது, தற்போது திறம்பட செயல்படுகிறது. எனது ஆட்சியில் ரூ.2200 கோடி சொத்­துக்­களை பறிமுதல் செய்துள்ளது என்று கூறினார்.

எதிர்கட்சிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பாஜ பயன்படுத்துவதாக குற்றம் எழுந்துள்ளதற்கு பிரதமர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர், “அமலாக்கத்துறை என்பது முன்பு (காங்கிரஸ்ஆட்சியில்) ‘யூஸ்லெஸ்’லாக இருந்தது. பா.ஜனதா ஆட்சியில் தான் அது திறமையாக செயல்படவே துவங்கியது. அமலாக்கத்துறை தனது பணிகளை செய்கிறது. 2004 முதல் 2014 வரை சட்டமும், நடைமுறைகளும் ஒன்று தான். நான் சட்டத்தை கொண்டு வரவில்லை. அமலாக்கத்துறையை நான் உருவாக்கவில்லை. அவர்கள் முற்றிலும் செயலற்றவர்களாக இருந்தனர். இந்தகால கட்டத்தில் அவர்கள் கைப்பற்றியது ரூ.34 – 35 லட்சங்கள் தான். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த பத்தாண்டுகளில் அவர்களை தடுத்தது யார்? ஆனால் எனது ஆட்சியில் அதே அமலாக்கத்துறை ரூ.2200 கோடி சொத்துக்களை கைப்பற்றி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளச்சந்தைக்காரர்களிடம் ரெய்டு நடத்தினால், சர்க்கரை மூட்டைகளை கைப்பற்றினால் அதுதான் செய்தியாக வந்தது. தடுப்பு நடவடிக்கைகள் திறம்பட எடுக்கப்பட்டதால் இப்போது பதுக்கல்கள் தடைபட்டன. அதே போலத்தான், பொறுப்பில் உள்ளவர்கள் திறம்பட செயல்பட்டால் நிச்சயம் ஊழலை ஒழித்து விட முடியும்” என்று கூறினார்.