அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
செனட் சபையில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்து குறைந்த பட்சம் இரண்டு பிரதிநிதிகள் உண்டு.
இது தவிர, பிரதிநிதிகள் சபையில் ஒவ்வொரு மாகாணம் சார்ந்தும், இவ்விரு கட்சிகளை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உண்டு. [அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கொண்ட மாகாணம் காலிஃபோர்னியா]
குடியரசு கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டு கட்சிகள் சார்பாகவும்,.அமெரிக்க பிரதிநிதிகள் சபை & செனட் சபை இரண்டிலும் இருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் அதிபரை தேர்ந்தெடுக்கும் Electoral college நபர்களை இவ்விரு கட்சிகளும் தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் ‘electors’ நபர்கள் அரசியல் அதிகார பதவிகள், அரசு பதவிகள் போன்றவற்றில் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், சமூக பங்களிப்பு செய்தவர்கள் , உள்ளூர் மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றவர்கள் போன்ற நபர்களை இவ்விரு கட்சிகளும் தங்கள் கட்சி சார்பாக தேர்தெடுத்து அறிவிப்பார்கள்.
அதிபரை தேர்ந்தெடுக்கும் இந்த electors நபர்களின் மொத்த எண்ணிக்கை 538. இதில் 270 வாக்குகள் தான் வெற்றிக்கான இலக்கு.
அமெரிக்க தேர்தலில் பொதுமக்கள். அந்தந்த மாகாணத்தில் குடியரசு கட்சி – டிரம்ப் & ஜனநாயகக் கட்சி-ஜோ பைடன் என்று தேர்வு செய்து வாக்களிப்பது ..இந்த elector நபர்களுக்கு தான். மக்கள் அளிக்கும் இந்த வாக்குகள் தான் ‘Popular Vote’என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் electors நபர்கள் Secretary of Stateஅழைக்கும் தினத்தில் வெள்ளை மாளிகைக்கு சென்று அதிபரை தேர்ந்தெடுக்கும் தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள்.
இதில் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட elector.தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி டிரம்ப் க்கு வாக்களித்தால
அல்லது டிரம்ப் கட்சி சார்ந்த elector அவருக்கு வாக்களிக்காமல் பைடனுக்கு வாக்களித்தாலோ… என்ன செய்வது ? அப்படி நடக்குமா ? என்றால்..
நடக்கும் அதற்கு ஒன்றும் செய்ய இயலாது அந்த வாக்குகள் செல்லும்.
சென்ற தேர்தலில் டிரம்ப் ஹில்லாரி போட்டியில் இப்படியான பிரச்சினைகள் எழுந்தன.Elector நபர்கள் வாக்களித்த பின்னோடு அவர்களின் பணி நிறைவுபெற்று அதோடு அந்த குறிப்பிட்ட electoral college கலைக்கப்பட்டுவிடும்.
இதன் பிறகு, Popular vote & Electors voteஇரண்டையும் கணக்கிட்டு வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார்.
இதனை தாண்டி postal ballot அது இது என்று பிரச்சினைகளை எழுப்புவதற்கான இடங்கள் வேறு பலவும் இருக்கின்றன.
குறைந்த வித்தியாசத்தில் வெற்றி தோல்வி ஏற்படுகிறது எனில் நீதிமன்றம், வழக்கு என்று இழுபறி ஏற்பட்டு அறிவிப்பு தாமதமாகும். 2000-ம் ஆண்டு Bush & Al Gore இடையே ஏற்பட்ட போட்டி அப்படியான இழுபறிக்கு சிறந்த உதாரணம்.
இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்