கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிபர் டிரம்பும், மெலனியாவும் விரைவில் குணமடைய வேண்டும் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்து!

Filed under: உலகம் |

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்பும் விரைவில் குணமடைய வேண்டும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்பும் மற்றும் அவருடைய மனைவி மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், டிரம்பும் மற்றும் மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில் இருவருக்கும் கொரோனா உறுதியானது.

இவர்கள் இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்பும் விரைவில் குணமடைய வேண்டும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.