அமைச்சர் செந்தில் பாலாஜி மின்கட்டணம் குறித்து விளக்கம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியுமா? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார்.

ஆதார் கார்டில் உள்ள எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் மின் அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தால் மட்டுமே மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும் செய்திகள் பரவி உள்ளது. இதையடுத்து பலர் மின்சார அலுவலகம் சென்று மின் அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்து வருகின்றனர். இந்நிலையில் ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் ஆனால் கண்டிப்பாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். இதையடுத்து மின் கட்டணம் செலுத்திவிட்டு அதன் பிறகு ஆதார் எண்ணை இணைக்கலாம் என்பது பொதுமக்கள் கூறப்படும் செய்தியாக உள்ளது. இருப்பினும் ஆதார் எண் மற்றும் மின் இணைப்பு எண் இணைப்புக்கு திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.