நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 84 வயதான துரைமுருகன் காய்ச்சல் என்றும் அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.