அமைச்சர் பொன்முடி தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும அறிவியல் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு புதிய திட்டம் என்னென்ன என்பதை அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்களும், அதன் கீழ் பல கலை அறிவியல் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இவை தவிர்த்து தன்னாட்சி பெற்ற பல்கலைகழகங்களும் செயல்படுகின்றன. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின் ஏராளமான மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பித்திருந்தனர். மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.