தமிழ்நாட்டில் 71 பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை!

Filed under: தமிழகம் |

தமிழ்நாட்டில் 71 பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் 71 பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி குழுவில் அங்கீகாரம் ரத்தான 58 கல்லூரியிலும் மற்றும் பல்கலைக்கழகத்தில் இணைப்பதற்கு அனுமதி வாங்காத 13 பி.எட். கல்லூரிகள் உள்பட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த 71 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றால் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பொறுப்பு கிடையாது.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.