அம்பானி – அதானியிடையே மோதல்!

Filed under: இந்தியா |

அம்பானி மற்றும் அதானி இந்தியாவில் 5ஜி ஏலத்தை எடுக்க போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அரசு சமீபத்தில் 5ஜி ஏலத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதியில் ஏலம் நடைபெற உள்ளது. 20 ஆண்டுகளுக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது என்றும் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கு மதிப்பு 4.3 லட்சம் மதிப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் உட்பட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அதானியும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 5ஜி ஏலத்தில் அம்பானி மற்றும் அதானி நேருக்கு நேர் மோதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.