அயோத்திக்குச் செல்லும் ரஜினிகாந்த்

Filed under: சினிமா |

நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சாமி தரிசனத்திற்காக ரஜினிகாந்த் செல்லவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. “ஜெயிலர்” திரைப்படம் கடந்த வாரம் வியாழனன்று வெளியானது. ஒரு வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. சென்னை, பிரசாத் லேப்பில் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் ஈடுபட்டனர். தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக சுற்றுப்பயணம் வட இந்தியாவில் மேற்கொண்டு வருகிறார். இன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படம் பார்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலுடன் நடிகர் ரஜினிகந்த் மரியாதை நிமித்தமான சந்தித்துள்ளார். மேலும், ஆன்மிக பயணத்தில் நாளை அயோத்தியிலுள்ள ராமர் கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.