இந்த இயக்குனர் படத்தில் நடிகர் கிருஷ்ணா வில்லனாக அறிமுகம்!

Filed under: சினிமா |

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் கொண்டிருக்கும் படம் ஜோஷ்வா : இமைபோல் காக்க.

இந்த படத்தில் வருண், ராஹி உள்பட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் பாடல் “நான் உன் ஜோஸ்வா” என்கிற பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இந்த பாடல் மூலம் நடிகர் கிருஷ்ணா இப்படத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் கிருஷ்ணா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என இயக்குனர் கௌதம் மேனன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதை பற்றி கௌதம் மேனன் ட்விட்டரில் கூறியது: ஜோஷ்வா : இமைபோல் காக்க படத்தில் கிருஷ்ணாவை வில்லனாக அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் இது. எனக்காக இதை செய்ய ஒப்புக்கொண்ட கிருஷ்ணாவுக்கு நன்றி. நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் அழகாக உள்ளீர்கள் ப்ரதர் என பதிவிட்டுள்ளார்.