வெங்காயம். தந்தை பெரியாரின் அரசியல் உ„சரிப்பு. ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதுபடுத்தினால் வெங்காயம் என்பார்கள். ஆனால், இந்த வெங்காயம் இந்திய அரசியல் வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் நிலையில் தற்போது உள்ளது. காரணம் இன்றைய வெங்காயத்தின் விலை உயர்வு மத்திய ஆட்சியையே கவிழ்க்கும் நிலைக்கு செய்யலாம் என்கிறார்கள்.
பா.ஜ.க. மத்தியில் ஆட்சி செய்தபோது டெல்லி மாநில ஆட்சி வெங்காயத் தட்டுப்பாட்டால் தோல்வியுற்றது. வெங்காயத்தை வைத்து மிகப்பெரிய அரசியலை காங்கிரஸ் நடத்தியது. தற்போது அதே வெங்காயம் காங்கிரசுக்கு ரிவிட் அடிக்கப்போவதாக கூறுகிறார்கள். பெரியார் அரசியல் தீர்க்கதரிசி. சாதாரண வெங்காயம் தற்போது இந்திய அரசியல் கட்சிகளின் தலைவிதியை முடிவு செய்கிறதாம். அதேபோல் உப்பு ராஜஸ்தான் மாநில அரசியலை கலக்கிக் கொண்டிருக்கிறது. காரணம் இந்தியாவிலேயே அதிக உப்பை தயார் செய்யும் 3வது மாநிலம் ராஜஸ்தான். இங்கு தற்போது தயாரிக்கப்படும் உப்பின் தரம் மிக மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. உப்பு தயாரிக்கும் மாவட்டங்களில் உப்பின் தரத்தை சோதித்த ராஜஸ்தான் மாநில அதிகாரிகள் பெரும் அதிர்„சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். காரணம் ராஜஸ்தானில் தயாரிக்கப்படும் உப்பு மக்கள் சாப்பிடக்கூடிய தரத்தில் இல்லை என்று கூறுகிறார்கள். ஆகமொத்தம் உப்பு சப்பு அற்ற விஷயம் என்று ஒதுக்கிவிடாமல் உடனே உப்பின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் மக்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.