சென்னையில் அரசு மருத்துவமனை மருத்துவர் சக மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையடுத்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2001ம் ஆண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் வெற்றிச்செல்வன் என்பவர் தான் தங்கியிருந்த விடுதியில் தங்கியிருந்த சக மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது மருத்துவர் வெற்றி செல்வனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.