சென்னையில் இரண்டு வாரங்களில் நல்ல மாற்றம் ஏற்படும் – மாநகராட்சி கமிஷனர்!

Filed under: தமிழகம் |

கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் அதிகமாக பரவி உள்ளது. இதனால் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வரும் நிலையில், இரண்டு வாரங்களில் நல்ல மாற்றம் ஏற்படும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்: அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருக்கும் சலூன் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், முக கவசம் அணியாமல் சுற்றியவர்களிடம் இருந்து 60 லட்சம் வரைஅபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.