வரும் 24 ஆம் தேதி அவினாசியிலுள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வர் கோவிலில் திருப்பணி தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் அவினாசியிலுள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற தலமாகவும், காசிக்கு நிகரான கோவில் என்று கூறப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான நாயனார் பதிகம் பாடிய சிறப்பு பெற்ற தலமிது. இந்த நிலையில், இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 14 ஆண்டுகள் ஆகிறது. எனவே திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. வரும் 24ம் தேதி காலை 7 மணிக்கு அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடக்க விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
Related posts:
கண்தானம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் - குடியரசு துணைத்தலைவர...
இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யாவை வணங்குகிறேன் - முத...
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்.
என்னை பற்றிய புத்தகம் விரைவில் வெளியிடுவேன் - பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை ட்வீட்!