கடந்த 24 மணி நேரத்தில் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சியூட்டும் தகவல்!

Filed under: சென்னை,தமிழகம் |

கொரோனா வைரசால் இதுவரை தமிழ்நாட்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 19,333 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 326 பேர் பலியாகியுள்ளனர். இதில் சென்னையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 258 பேர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்த பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.

அந்த 191 பெண்களில் 68 பேர் எழும்பூர் மருத்துவமனையிலும், 24 பேர் கீழ்பாக்கம் மருத்துவமனையிலும், 70 பேர் ராயபுரம் மருத்துவமனையிலும், 29 பேர் திருவல்லிக்கேணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.