மத்திய கல்வி அமைச்சகம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. புதிய கல்வி கொள்கையின்படி இனி பிளஸ்-1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேர்வில் எதில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் எடுக்கின்றார்களோ அந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் ஆர்வத்துள்ளது. பிளஸ்- 1, பிளஸ் 2 மாணவர்கள் படிக்கும் இரண்டு மொழி பாடத்தில் ஒன்று இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றோ மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.