+2 தேர்வில் 9 ஈஷா வித்யா பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி !

Filed under: தமிழகம் |

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் அனைத்து ஈஷா வித்யா பள்ளி மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஈஷா கல்வி அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி அளிப்பதற்காக கோவை, ஈரோடு, மேட்டூர், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், நாகர்கோவில், தூத்துக்குடி, கரூர் ஆகிய 9 இடங்களில் ஈஷா வித்யா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

சுமார் 8 ஆயிரம் பேர் படிக்கும் இப்பள்ளிகளில் இருந்து மொத்தம் 219 மாணவ, மாணவிகள் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவுகளின்படி, அவர்கள் அனைவரும் சிறப்பான மதிப்பெண்களுடன் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்கள் எடுத்த சராசரி மதிப்பெண் இந்தாண்டு 70 ஆக உயர்ந்துள்ளது.

ஈஷா வித்யா பள்ளிகளில் படிக்கும் 60 சதவீதம் மாணவர்கள் கட்டணமின்றி இலவச கல்வி பெறுவதும், அவர்களில் பெரும்பாலோனார் முதல் தலைமுறை கல்வி பயிலும் மாணவர்கள் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.