செம்மரம் கடத்தும் தொழிலில், சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவியான தொழிலாளர்களை மரம் வெட்டும் கூலிகளாக பயன்படுத்தப்படுகின்றனர்!
செம்மரங்கள் மருத்துவ குணம் கொண்டவை என்றும், செக்ஸ் குறைபாடுகளை நீக்கும் ‘வயாக்கரா’ மருந்து தயாரிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது! ஆந்திர மாநிலம் & திருப்பதியை ஒட்டிய மலையடிவாரப் பகுதியிலிருந்து வெட்டி கடத்தப்படும் மரங்கள், குறிப்பாக சீனா, ஜப்பான், மலேசியா, மியான்மர், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு, கடும் கிராக்கி வெளிநாடுகளில் உள்ளது என்கின்றனர். ஒரு டன் செம்மரம் & ரூ. 50 லட்சம்!
திருப்பதி சேஷாசல காட்டில் அறிவாளி மெட்டு என்ற பகுதியில், தினமும் செம்மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகிறது. இந்த மரக் கடத்தலை தடுத்தே தீருவேன் என தேர்தல் வாக்குறுதியாக கூறிவந்த சந்திரபாபு நாயுடு, கடத்தலை தடுக்க, மலையேறும் பயிற்சிபெற்ற ஆயுதப்படை காவலர்களையும், சிறப்பு வனக் காவல் படையினரையும் ஈடுபடுத்தி, கடத்தலை தடுத்து வந்தார்.
7.4.2015ல் அதிகாலை ஐந்து மணியளவில், திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளைச் சார்ந்த மலைவாசிகள், திருப்பதி சேஷாசல வனப் பகுதியில், ஈதாகுண்டா, சீசாடிகோனா பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும், கூலிகள், கடத்தல் செம்மரக் கடத்தல் பிரிவு சிறப்பு படையினர் மீது, கற்களை வீசி, தாக்குதல் நடத்தினர். ஏற்கெனவே 144 தடையுத்தரவும் செம்மரக் கடத்தல் ஆசாமிகளை சுட்டுப் பிடிக்கும் உத்தரவும் நடைமுறையில் இருப்பதால், ஆந்திர மாநில அரசின் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புப் படையினர், துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் உட்பட 20 பேர் பலியானார்கள்! தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் உட்பட இருபது பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளனர்.
இதுவரை ஆந்திர வனப் பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், 100 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ஆந்திர சிறைகளில் உள்ளனர்!
துப்பாக்கிசூட்டில் பலர் பலியானாலும், வறுமையின் காரணமாக, நாளன்றுக்கு கூலி ரூ. 2000 முதல் 10,000 வரை கிடைக்கிறது. எனவே, தொழிலாளர்களை செம்மரக் கடத்தலுக்கு அனுப்பிவைத்திட, ஏஜெண்டுகள் வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டீக்காராமன், தி.மு.க.வில் பாபு, அ.தி.மு.க.வில் மூன்றெழுத்து பிரமுகர்கள், தே.மு.தி.க., பா.ம.க. என அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும், ஏஜெண்ட்டுகளாக உள்ளனர்.
நாகநதியில் மார்கபந்து, பழனி. ரங்காபுரம், தேவேந்திரன், சேட்டு, சிவா, சிவசந்திரன், செந்தில். கரகாட்டக்காரி மோகனா, சரவணன், தீனதயாளன் ஆகியோர், போலீஸ் மாமூலுடன் செம்மரம் பதுக்கிக் கடத்துபவர்கள். இதில், கரகாட்டக்காரி மோகனா. சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் ரூ. 5 கோடி கைப்பற்றப்பட்டது. திருவள்ளூர் பஷீர், பாண்டியன், மனோ மற்றும் சங்கராச்சாரியார் கொலைக் குற்றவாளி அப்பு தலைமையில் இயங்கி வந்த கும்பல். திருவள்ளூரில் ஒரு குரூப், குடோன் வைத்து வெளிநாடுகளுக்கு செம்மரம் கடத்தி வருகின்றனர். கடத்தல் புள்ளிகளின் பேராசைகளால், மரம் வெட்டும் கூலிகள் மாண்டு போய்விட்டனர். இதனை தமிழக அரசு தடுக்கவேண்டும். ஆந்திர அரசும், யோசிக்கவேண்டும்!
வனப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியது மனித உரிமை மீறல் என்பதால், இதில் தேசிய மனித உரிமை ஆணையமும், சர்வதேச மனித உரிமை ஆணையமும் விரைவில் களமிறங்கி விசாரிக்க உள்ளது! கடத்தலை தடுக்க, கூலிகளை குருவிகள் போல், சுட்டுத் தள்ளுவது, எந்த வகை நியாயம்? ஆந்திர மாநில அரசை தமிழக அரசு கண்டனம் செய்ய வேண்டும்!