பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது.
ஆந்திர சட்டசபை தேர்தலில் முடிவின்படி தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக எட்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் கூட்டணியாக போட்டியிட்டன. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 13 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இன்னும் சில நிமிடங்களில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும். இன்னும் ஒரு சில நாட்களில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்வார். அப்போது அகில இந்திய அளவில் உள்ள முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.