இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் இருமடங்கு வேகமாக உருகத் தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன.
புவி வெப்பமயமாதல் உலகின் பெரும் சவாலாக உள்ளது. இதனால் உலகில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்றும், அது ஆபத்திற்கு இட்டுச்செல்லும் எனவும் வல்லுர்கள் எச்சரிக்கின்றனர்.
உத்தராகண்ட் பனிச்சரிவு கூட புவி வெப்பமயமாதலின் வெளிப்பாடு தான். இதுபோன்ற திடீர் பேரிடர் ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்திவிடும். வானிலையை கணிக்க முடியாத சூழல் ஏற்படும்.
அப்படித்தான் தற்போது இமயமலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது . உலக வெப்பமயமாதல் காரணத்தால் இந்த 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பனிப்பாறைகள் உருகும் நிகழ்வு நடந்துக் கொண்டிருக்கிறது .
இமயமலை பாறைகளை பருவநிலை மாற்றம் காலி செய்து வருகிறது . கடந்த 40 ஆண்டுகளில் இந்த பனிப்பாறைகள் , கால் பகுதியை இழந்து விட்டன . பனிப்பாறைகள் உருகுவது சீராக நடைபெற்று வருகிறது .
இப்படியே பனிப்பாறைகள் உருகுவது தொடர்ந்தால் ஆசிய நாடுகளுக்கு குடிநீர் கிடைப்பதே கேள்விக்குறியாகிவிடும் என கூறப்படுகிறது .