அலுவலக ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்ட ஹிமாச்சல் பிரதேசம் முதலமைச்சர்!

Filed under: இந்தியா |

ஹிமாச்சல் பிரதேசம் முதல் அமைச்சர் அலுவலக ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்குர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

இதனைப்பற்றி முதலமைச்சர் அலுவலகம் அதிகாரி ஒருவர் கூறியது: முதலமைச்சர் அலுவலகத்தில் துணைச் செயலராக வேலை பார்க்கும் அதிகாரி ஒருவர் சமீபத்தில் அவருக்கு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக முதல் அமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார்.

முதலமைச்சர் மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கு விரைவில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற இருக்கிறது. மேலும், முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.