ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். அவர்களில் திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஜூலை 5ஆம் தேதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடையவர்கள் என 20க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலை என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொலை வழக்கில் திருமலை தான் ஆம்ஸ்ட்ராங் நடமாட்டம் தொடர்பான தகவலை கொலை கும்பலுக்கு கொடுத்தவர் என்று கூறப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமலைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை படிப்படியாக தேறி வருவதாகவும் கூறப்படுகிறது. முழுமையாக அவர் குணம் அடைந்தவுடன் மீண்டும் பூந்தமல்லி சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் கூறப்படுகிறது.