ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் திடீரென கூட்டம் நடத்தப் போவதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
உயர் கல்வி அமைச்சர் பொன்முடி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னால் துணைவேந்தர் கூட்டத்தை நடத்தினார். அதில் சில முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது. உயர்கல்வி அமைச்சரின் கூட்டத்தை அடுத்து அதிரடியாக ஆளுநர் ரவி, துணைவேந்தர் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளார். இக்கூட்டத்தில் தமிழக பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வியின் தரம், சமீபத்தில் பொறியியல் கல்லூரியில் நடந்ததாக கூறப்பட்ட மோசடி உள்பட சில முக்கிய விஷயங்கள் இன்று ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.