இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் தீட்சதர் குறித்து ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஆளுநர் ரவி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும், சிதம்பரம் தீட்சிதர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஏன் கூறுகிறார். ஆளுநர் என்ன ஆண்டவரா? என்று கேள்வி எழுப்பினார். தீட்சதர்களுக்கு என ஏதும் தனி சட்டம் உள்ளதா? ஆளுநர் குறிப்பிடுவது போல சிறுமியர்களுக்கு இரட்டை விரல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. சிதம்பரம் தீட்சதர் விவகாரம் குறித்து சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஆளுநர் பேட்டியளித்த நிலையில் அவருடைய கருத்துக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.