சிபிஐ மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்து கைது செய்ய வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஆளுநர் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வருகிறார். குறிப்பாக நேற்று அவர் திராவிட மாடல் குறித்து பேசிய கருத்துக்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆளுநரின் கருத்துக்கு ஒரு சிலர் பெரும் ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பிரிவினர் பெரும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய போது, “ஆளுநர் ரவி ஜனநாயக ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறையை செய்து வருகிறார். மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பதால் ஆளுநர் திமிராக பேசி வருகிறார். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்து கைது செய்ய வேண்டும்” என்று பேசியுள்ளார். இவரது பேட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.