என்னை பற்றிய புத்தகம் விரைவில் வெளியிடுவேன் – பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை ட்வீட்!

Filed under: தமிழகம் |

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை அண்மையில் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் அவர்கள் மற்றும் மாநில தலைவர் முனைவர் திரு முருகன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

நேற்று அண்ணாமலை அவர்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தற்போது என்னை பற்றிய புத்தகம் விரைவில் வெளியிடுவேன் என அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்; மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் பொழுது தான் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று பொறுப்புக்கு வந்தேன். கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத ஆட்சியின் கீழ் வேலைபார்த்து உள்ளேன். பின்பு பாஜக ஆட்சியில் நான்கு நாட்கள் வேலைபார்த்து உள்ளேன். மேலும், என்னை பற்றிய முழு வாழ்க்கை கதையை புத்தகமாக விரைவில் வெளியிடுவேன்.

இவ்வாறு பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.