இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்!

Filed under: இந்தியா |

பெண் மருத்துவர் ஆந்திராவில் சிறுவனுக்கு திடீரென இதயம் என்ற நிலையில் அவரைப் முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார்.

ஆந்திராவில் விஜயவாடாவில் 6 வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அந்த சிறுவன் தூக்கி எறியப்பட்டு பேச்சு மூச்சு இன்றி கீழே விழுந்துவிட்டார். சிறுவனின் தந்தை அலறி அடித்துக் கொண்டு தனது மகனை தோளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றார். அந்த வழியாக மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் ரவள்ளி சென்று கொண்டிருந்தபோது என்ன என்று விவரம் கேட்டுள்ளார். இதையடுத்து சிறுவனை பரிசோதித்து விட்டு சாலையிலேயே படுக்க வைத்து சிறுவனின் மார்பில் இரண்டு கைகளையும் வைத்து அழுத்தினார். இதனை மருத்துவர் ரீதியாக சிபிஆர் என்று கூறப்படும் நிலையில் கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் அழுத்தியபிறகு அந்த சிறுவன் மெல்ல மூச்சு விட தொடங்கினார். இதனை அடுத்து அந்த சிறுவனுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டது. தற்போது சிறுவன் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய பெண் மருத்துவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.