இந்தியக் கைதிகளை விடுதலை செய்த நாடு – 127 பேர் நாடு திரும்பல்!
கொரோனா அச்சம் காரணமாக பல நாடுகளும் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை ஆகியவற்றை வழங்கி வருகின்றன.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் 3 மாதங்களாக உலகம் முழுவதும் உள்ள அரசுகள் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஜாமீன் மற்றும் விடுதலை ஆகியவற்றை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் சிறை தண்டனை பெற்று வந்த 127 இந்திய கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி உள்ளது. அவர்கள் கல்ப் ஏர்வேஸ் தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு அனுப்பி வைத்தது. கொச்சியில், வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு, கொரோனா சோதனைக்காக தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 14 நாள் தனிமைக்கு பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.