“இந்தியன் 2” டிரெயிலர் ரிலீஸ் எப்போது?

Filed under: சினிமா |

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. பாடல்களும் வெளியாகியுள்ளன. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. இந்த படத்துக்கான வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் டிரெயிலர் ஜூன் 24ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டீசர் எதுவும் ரசிகர்களைப் பெரிதாக ஈர்க்கவில்லை. டிரையிலராவது ரசிகர்களைக் கவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.