இந்தியாவின் டாப்லிஸ்ட்டில் சென்னை ஐஐடி முதலிடம்!

Filed under: சென்னை |

சென்னை ஐஐடி இந்தியாவின் டாப் 100 உயர் கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளது. இப்பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி 86.69 புள்ளிகள் பெற்று ஐ.ஐ.டி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி உள்ளது. 72.14 புள்ளிகளுடன் டெல்லி எய்மஸ் நிறுவனம் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. 62.74 புள்ளிகளுடன் 15ம் இடத்தில், கோவை அமிர்தா விஷ்வ வித்தியாபீடம் இடம் பெற்றுள்ளது. 17ம் இடத்தில் வேலூர் வி.ஐ.டி மற்றும் 18ம் இடத்தில் சென்னை அண்ணா பல்கலைகழகம் இடம் பெற்றுள்ளன. 21ம் இடத்தில் திருச்சி என்.ஐ.டி, 27ஆம் இடத்தில் சென்னை சவீதா மருத்துவ கல்லூரி, 32ம் இடத்தில் சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம், 36ம் இடத்தில் கோவை பாரதியார் பல்கலைகழகம் இடம் பெற்றுள்ளன. புதுச்சேரி ஜிப்மர் 39ம் இடத்தையும், ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைகழகம் 48ம் இடத்தையும் பெற்றுள்ளன.