இந்தியாவில் புதிய வகை கொரோனா!

Filed under: இந்தியா |

கொரோனா தொற்று நோய் கடந்த 2 ஆண்டு காலமாக உலகம் முழுவதும் பரவியது. இதன் பாதிப்பிலிருந்து மக்கள் வெளிவர தொடங்கிய போது இப்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், பிஏ.4 மற்றும் பிஏ.5 அலைகள் உருவாகியுள்ளது. இந்தியா உட்பட நாடுகளில் ஏபி.2.75 என்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புதிய வைரஸ் தோன்றினால், அது முந்தைய வைரஸை விட வித்தியாசமாக இருக்குமானால் அது தனி மாறுபாடு என அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய வகை வைரஸ் தொற்று இந்தியாவில் உருவாகியுள்ளதை சுகாதார அமைப்புத்திட்டமாக உறுதி செய்துள்ளது.