இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

Filed under: இந்தியா |

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தினால் இது வரை ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா நடவடிக்கைகள் பற்றி டெல்லியில் அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று நடந்தது.

இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய ஹர்ஷ்வர்தன் கூறியது: இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை. இந்தியாவில் மக்கள் தொகை உள்ளதால் கொரோனா தொற்று அதிகமாக தெரிகிறது என்றார்.