ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்னாத் சேனா அமைப்பு கோகினூர் வைரத்தை உரிமை கோரியுள்ளது.
1850ல் இந்தியாவின் அரிய பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரம் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. அரிய வகை வைரமான இது ஆண் அரசர்களுக்கு கெடுதல்களை விளைவிக்கும் சக்தி கொண்டது என நம்பப்பட்டதால் பெண்ணரசிகள் அணியும்படி மகாராணியின் கிரீடத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகாலமாக ராணி எலிசபெத் கிரீடத்தை அலங்கரித்த பல ஆண்டுகளாக இந்தியாவின் சொத்தான கோஹினூர் வைரத்தை இந்தியாவிற்கே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன.
தற்போது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்னாத் சேனா அமைப்பு, கோகினூர் வைரம் பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு சொந்தமானது என்று அறிவித்துள்ளது. பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங், ஆப்கானிஸ்தானை சேர்ந்த நாதிர் ஷாவை போரில் தோற்கடித்தார் என்றும், இந்த வெற்றியின் நினைவாக பூரி ஜெகநாதருக்கு கோகினூர் வைரத்தை நன்கொடையாக அவர் அளித்தார் என்று தெரிவித்துள்ளார். மேலும் மீண்டும் இந்தியா கொண்டு வருவதற்கான செயல் முறையை எளிதாக்கும் நடவடிக்கையில் தலையிடுமாறு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முக்கு, பட்நாயக் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.