அமெரிக்க அதிபரின் இந்திய பயணம், இந்திய தாய்க்கு அணிவிக்கப்பட்ட விலைமதிக்க முடியாத மணிமகுட வரலாறு படைத்த மோடி, முதன்முறையாக பிரதமராக அமெரிக்க அதிபரை விமான நிலையத்தில் வரவேற்று சரித்திரம் படைத்துள்ளார். எப்போதுமே பிரதமருக்கும் அதிபருக்கும் இடையே அதிகாரிகள் இருப்பது நடைமுறை. ஆனால் இரு தலைவர்களும் ஹைதராபாத் மாளிகையில் மிகவும் வெளிப்படையாக நடந்து அரசியல் அலசிய காட்சி வரலாற்று சிறப்பு மிக்கது.
அமெரிக்காவை வைத்து பிலிம்காட்டி நடக்கும் இந்திய அறிவாளிகளுக்கு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மோடி அடித்த ஆப்பு பாராட்டத்தக்கது. 2வது முறையாக இந்தியா வரும் ஒபாமா, மோடி அளித்த வரவேற்பில் மகிழ்ந்து போயுள்ளார். தற்போது அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற இந்தியர்களின் உதவி அவசியம் என்பதை அரசியல் தலைவர்கள் உணர்ந்து உள்ளனர். இந்தியர்களின் எழுச்சி உலகளவில் எழுந்து உள்ளது. வெளிநாட்டவரைக் கொண்டு, இந்தியர்களை கொன்ற ஆட்சியாளர்கள் தற்போது எழுந்து நிற்கமுடியாமல் பேயறைந்து நிற்கிறார்களாம். எங்கு நோக்கினும் இந்தியா! இந்தியா! என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இந்திய தாய்க்கு மணிமகுடம் அணிவித்தவர்களாக நரேந்திரமோடியையும், ஜெயலலிதாவையும் குறிப்பிடுகிறார்கள்.
இலங்கையை மீண்டும் இலங்கை மக்களுக்கு மீட்டு தந்தவர் ஜெயலலிதா என்று தமிழ்குலம் பாராட்டுகிறது. தமிழர்களை கொன்று தீர்த்த தமிழக எட்டப்பர்கள், தற்போது எலியினும் கீழாக முடங்கி கிடக்கிறார்கள். இலங்கை பிரச்சனையை வைத்து, அரசியல் வியாபாரம் முடங்கி விட்டதைக்கண்டு அலறுகிறார்கள். இலங்கை அதிபரை உசுப்பிவிட்டு கொள்ளையடித்த தமிழக அறிவாளிகள், தமிழக எல்லையைதாண்ட நடுங்குகிறார்கள். மொத்த அரசியல் விளையாட்டுக்களையும் மௌனமாக அரசியல் காய்நகர்த்தி, அரசியல் சாணக்கியத்துடன் வெற்றி கண்டுள்ளார் ஜெயலலிதா. நரேந்திரமோடியும் மிகவும் திறமையாக ஒதுங்கியது பாராட்டத்தக்க அரசியல் நாகரீகம். இனி இலங்கையும், இந்தியாவும் கடல் பகுதியில் கைகோர்த்து செயல்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தலைநகரான டெல்லி மக்கள் சுதந்திர உணர்ச்சி அதிகம் உடையவர்கள். கடும் குளிரில் தூறல் அல்லது மழை பொழியும்போது, நடுங்கும் குளிராக மாறும் இந்திய குடியரசு தின விழாவில், மழையையும் பொருட்படுத்தாது, வீரர்களை உற்சாகப்படுத்திய தலைநகர் டெல்லி மக்களுக்கு நவீன நெற்றிக்கண் அடிபணிந்து சல்யூட் அடிக்கிறது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி திருப்பங்களுடன் மிகத்திறமையாக வாதாடப்படுவதாக கர்நாடக வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். ஜெயலலிதாவின் மூத்த வழக்கறிஞர் எடுத்துரைத்த வாதத்தில் அதிசயித்துப்போன நீதிபதி, பலமுறைகள் எதிர்தரப்பினை விளக்கம் கேட்ட நிகழ்ச்சிகள் நடந்ததாம். மிக எளிதாக உண்மை வாதங்களை திறமையுடன் எடுத்துரைத்து வெற்றிகரமாக முடிக்கவேண்டிய வழக்கை வேண்டுமென்றே சிதைத்து, ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்த எட்டப்பர்களை ஜெயலலிதா இனம் கண்டு அமைதியாக உள்ளதாக உள் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் வரும் ஏப்ரல் மாதத்தில் விடுதலை பெற்று முதல்வராகும் ஜெயலலிதா செப்டம்பரில் தேர்தல் நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அகில இந்திய காங்கிரசின் நிலைமை ராகுல் ஆதரவாளர்களால் அதிர்ந்து போயுள்ளது. எங்கு நோக்கினும் தோல்வி பயமுறுத்துகிறது. அரசியல் லாபம் கொண்டு அரசியல் நடத்தும் காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக கழண்டு கொள்ளும் படலம் நடந்து கொண்டிருக்கிறதாம். இந்திய உணர்வுகளை கேவலமாக மதித்த காங்கிரஸ் தலைமை, தற்போது இந்திய உணர்வுகள் பொங்கி எழுந்து உலகமெங்கும் பரவி துடிப்பதைக் கண்டு மிரண்டு போயுள்ளதாம். மதச்சார்பற்றத்தன்மை என்ற குச்சிமிட்டாய் போணி ஆகவில்லை என்கிறார்கள். தமிழர்கள் இலங்கைக்கு அடித்த ஆப்பு, உலகம் முழுவதும் நன்றி கூறி கை தட்டி வரவேற்கிறது. எல்லாம் அம்மா செயல் என்கிறார்கள்.